வந்த பசிக்கோர் பிடிசோறும்
வற்றாக் கலத்தில் ஒளி மதுவும்
அந்தம் நிறைந்த கவிதையும் என்
அருகில் நீயும் தேன்குரலும்
குந்தி இருக்க குளிர்நிலமும்
கூடி அமைந்தால் போதாவோ?
வெந்த பொட்டல் வெளியிதுவும்
வியன் பொன் உலகம் ஆகாதோ?
Tuesday, December 11, 2007
மன்னித்தோம்.......!
மானிடனை இம் மண்ணுக்குள்
மடக்கி அடைத்த பரம்பொருளே!
வானம் படைத்தாய் எனில் உள்ளே
வஞ்சப் பாம்பும் ஏன் வைத்தாய்?
ஆனால் பாவத் தழுத்தி உயிர்
அழுக்குப் பிடித்தோய் மன்னிப்பாய்
ஊனம் படைத்தாய் நீயன்றோ
உனை மன்னித்தோம் ஏற்றருள்வாய்!
மடக்கி அடைத்த பரம்பொருளே!
வானம் படைத்தாய் எனில் உள்ளே
வஞ்சப் பாம்பும் ஏன் வைத்தாய்?
ஆனால் பாவத் தழுத்தி உயிர்
அழுக்குப் பிடித்தோய் மன்னிப்பாய்
ஊனம் படைத்தாய் நீயன்றோ
உனை மன்னித்தோம் ஏற்றருள்வாய்!
விதி
எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
காலப் பறவை
வருவாய் நண்பா வண்ண மது
வாரிப் பருகி இரக்கமெனும்
நிரையப் போர்வையை இளவேனில்
நெருப்பினிலே இன்றே வீசிவிடு.
விரையும் காலப் பறவைக்கு
வீசிப் பறக்க மற்றிங்கே
ஒருகை அகலந்தான் அதற்குள்ளு
ஓகோ பறந்து விட்டதடா!
வாரிப் பருகி இரக்கமெனும்
நிரையப் போர்வையை இளவேனில்
நெருப்பினிலே இன்றே வீசிவிடு.
விரையும் காலப் பறவைக்கு
வீசிப் பறக்க மற்றிங்கே
ஒருகை அகலந்தான் அதற்குள்ளு
ஓகோ பறந்து விட்டதடா!
Subscribe to:
Posts (Atom)